This tips will give beautiful neck

பெண்கள் தங்களது கழுத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவும் டிப்ஸ்..

பெண்களின் வயது முதிர்ச்சியை முதலில் வெளிக்காட்டும் பகுதி கழுத்துதான். அழகான சங்கு கழுத்து பெறுவது ஒன்றும் சிரமமான காரியமல்ல. இந்த டிப்ஸ்களை பின்பற்றி வந்தாலே போதும்.

** முகத்திற்கு மட்டுமே பேஷியல் செய்து பிரகாசிக்க செய்வதால், கழுத்து இன்னும் அதிகமாக அதன் நிறத்தை இழந்து, கறுப்புத் திரை போல காணப்படுகிறது. எனவே, முகத்தோடு கழுத்துக்கும் சேர்த்து, பேஷியல், ப்ளீச்சிங் செய்ய வேண்டும்.

** முகத்தோடு சேர்த்து கழுத்தையும் அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலமும், தினமும் இரண்டு மூன்று முறை சன் ஸ்க்ரீன் லோஷன் மற்றும் சுருக்கம் நீக்கும் க்ரீம் தடவுவதன் மூலமும் கழுத்தின் அழகை அதிகப்படுத்தலாம்.

** இந்த உடற்பயிற்சி கூட உதவும். "தலையை ஒரு பக்கமாக சாய்க்கவும். உங்கள் கன்னத்திலும், கழுத்திலும் ஒருவிதமான அழுத்தம் ஏற்படுவதை நீங்கள் உணர்வீர்கள். மெதுவாக மீண்டும் பழைய நிலைக்கு வரவும். இப்படி, 30 தடவை தினமும் செய்யவும்.

** கழுத்துப் பகுதியும், மூக்கின் இரு பக்கங்களும் கறுப்பாக உள்ளவர்கள், கோதுமை மாவு, பயற்றம் மாவு, ஓட்ஸ்மாவு ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து, அதில் எலுமிச்சைச் சாற்றை ஊற்றிக் கலந்து, கழுத்திலும், மூக்கின் பக்க வாட்டிலும் பூசி, 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், கறுப்பு நீங்கி விடும்.