Asianet News TamilAsianet News Tamil

பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை இந்த சமையல் பொருள் விரைந்து அகற்றும்...

This recipe is quick to remove the yellow stains on the teeth ...
This recipe is quick to remove the yellow stains on the teeth ...
Author
First Published Feb 2, 2018, 2:32 PM IST


பற்களில் மஞ்சள் கறை 

** பற்களில் மஞ்சள் கறை இருப்பது இயல்பாக நீங்கள் சிரிக்கும் முறையை கூட பாதிக்கும். எங்கு யாராவது நமது பற்களில் மஞ்சள் கறை இருப்பதை கண்டால் கேலி, கிண்டல் செய்வார்களோ என வாய் திறக்காமல் மிகவும் ஃபார்மலாக சிரிப்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.

** பலரும் பல டூத் பேஸ்ட்டை பயன்படுத்தியும் இந்த பற்களின் மஞ்சள் கரையை போக்க முடியாமல் தவிப்பதுண்டு. சிலர் எதுவும் வேலைக்கு ஆகவில்லை எனில், நேராக பல் மருத்துவரிடம் சென்று செயற்கை முறைகளை பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.

** கவலையை விடுங்கள் மிக எளிய இயற்கை முறையில் பற்களில் படிந்திற்கும் மஞ்சள் கறையை போக்க முடியும். முள்ளை முள்ளால் எடுப்பது போல, மஞ்சள் கறையை மஞ்சளை கொண்டே போக்க முடியும்….

தேவையான பொருள்

** கடைகளில் விற்கும் மஞ்சள் பொடியை தேர்வு செய்யாமல், இயற்கையான மஞ்சளை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இயற்கை மஞ்சளில் தான் செயற்கை இரசாயன கலப்பு இருக்காது.

பயன்படுத்தும் முறை

** உங்கள் டூத் பிரஷை ஈரப்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள். மிக குறைவான அரை கால் பங்கு (1/8) மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சளை தொட்டு மென்மையாக பிரஷ் செய்யுங்கள்.

** உடனே வாய் கழுவிவிட கூடாது. பிரஷ் செய்த பிறகு 3-5 நிமிடங்கள் அந்த மஞ்சள் பற்களில் இருக்கும் படி பேசாமல் அமைதியாக உட்கார்ந்துக் கொள்ளுங்கள்.

** 5 நிமிடங்கள் கழித்து நன்கு வாய் கொப்பளித்து கழுவி கொள்ளவும். பிறகு சாதாரண பல் போடி அல்லது டூத் பேஸ்ட் பயன்படுத்தி மீண்டும் பல் துலக்குங்கள். இது வாயில் வீசும் அந்த மஞ்சளின் வாசம் போவதற்கு உதவும்.

** ஒரு வாரம் தொடர்ந்து ஒரு வாரம் இதை பின்பற்றி வந்தால்

** பற்களில் படிந்திருக்கும் அந்த மஞ்சள் கறையை எளிதாக போக்கிவிடலாம். நீங்கள் இதை பின்பற்றிய முதல் நாளிலேயே மாற்றத்தை உணர முடியும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios