This is the main reason we have the memory capacity - the study says ...
அல்ஸீமர் நோய் ஏற்பட்டு நினைவாற்றில் திறன் குறைய குறைந்தளவு தூக்கம்தான் காரணம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வில் இதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
தற்காலிக நினைவுகளை மூளையின் நிரந்தரமான நினைவுப் பகுதிக்கு கொண்டு செல்வதில் பீட்டா அமிலோய்ட் எனும் புரத உற்பத்தி பங்கு வகிக்கிறது.
இந்த பீட்டா அமிலோய்ட் எனும் புரத உற்பத்தி பாதிக்கப்படுவதே நினைவாற்றல் திறன் குறைவதற்கு முக்கிய காரணம் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பீட்டா அமிலோய்ட் புரத உற்பத்தி பாதிக்கப்படுவதற்கு ஆழமான தூக்கம் இன்மை, சீரான தூக்கமின்மை என்பன காரணமாக அமைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்விற்காக 65 தொடக்கம் 81 வயதிற்கு இடைப்பட்ட 26 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
