This fruit will get back the glee that is lost in the sun ...

விளாம்பழம்

வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பழம் சிறந்த மருந்தாகும். 

1.. இரண்டு டீ ஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இழந்த பொலிவை மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும்.

2.. விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும். 

3.. பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும். 

4.. விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும் புள்ளிகளும் காணாமல் போகும்.

5.. வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு. காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள் – 100 கிராம், சீயக்காய், வெந்தயம் – தலா கால் கிலோ. இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும். 

6.. செம்பருத்தி இலை, விளாம்பழ இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சூப்பர் சுத்தமாகிவிடும்.