பள்ளி செல்லும் மாணவர்களுக்கு, ஸ்நாக்ஸ்-க்கு பதிலாக பழங்களை கொடுக்கலாம். இப்போது, சீதாப்பழத்தின் நன்மைகளை பார்க்கலாம்.
நம் உடல் நலனை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிப்பவை பழங்கள். ஒவ்வொரு பழமும் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. தினசரி பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பழங்கள் பல நன்மைகளை நமக்கு அளிப்பதால், அவசியமாக நம் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு, ஸ்நாக்ஸ்-க்கு பதிலாக பழங்களை கொடுக்கலாம். இப்போது, சீதாப்பழத்தின் நன்மைகளை பார்க்கலாம்.
சீதாப்பழங்கள்
சீதாப்பழங்கள் இனிப்பு சுவை உடையது மட்டுமின்றி, நமது நுரையீரலுக்கு வலிமையைச் சேர்க்கிறது. மேலும், சீதாப்பழங்கள் காற்று மாசுபாட்டை சுத்திகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சீதாப்பழ மரத்தின் கனிகள், இலைகள் மற்றும் மரத்தின் பட்டை என அனைத்திலும் மருத்துவ பன்கள் நிறைந்துள்ளது.

சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள்
சீதாப்பழத்தில் 100 கலோரிகள் மட்டுமே இருக்கிறது. மேலும், 2.1 கிராம் புரதச்சத்து, 4.4 கிராம் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் இப்பழத்தில் நிறைந்துள்ளது.
Agathi Keerai: ஆரோக்கியம் காக்கும் அகத்திக் கீரை: அளப்பரிய மருத்துவப் பலன்கள் இதோ!
சீதாப்பழத்தின் பலன்கள்
இன்சுலின் சுரப்பதை சீதாபழம் ஊக்கப்படுத்துகிறது. குளுக்கோஸை சீக்கிரமாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு உடலை மாற்றும். 100 கிராம் சீதாப்பழத்தில், 20 மில்லி கிராம் வைட்டமின் C இருக்கிறது. இதில் இருக்கும் பொட்டாசியம், தசைகள் தளர்வடைவதை குறைக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
இப்பழம், இரத்த கொதிப்பை தடுப்பதால், இதய கோளாறு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது, குடலுக்கு நன்மையை அளிக்கிறது. அனைத்து நன்மைகளையும் நீங்கள் ஒரே பழத்தில் பெற முடியும் என்றால், அது சீதாப்பழம் தான். வைட்டமின் பி6 மற்றும் ரிபோபிலாவின், பி காம்பிளக்ஸ் ஆகியவை இப்பழத்தில் உள்ளன.
