எல்லா உணவுகளும் ஒவ்வொரு விதமான சத்துக்களை உடலிற்கு கொடுக்கின்றன. தனக்கென்று உயிர்ச் சத்துக்களை இந்த உணவுகள் கொண்டுள்ளன.  ஆனால் இந்த உணவுகளுடன் மற்ற சில உணவுகளை சேர்த்து உண்ணும்போது இரண்டும் கலந்து நன்மை தருவதற்கு பதிலாக கெடுதலை தருகின்றது.  

அப்படிப்பட்ட உணவுகளை சில இதோ…

  1. காலையில் எழுந்தவுடன் சிலர் நீராகம் பருகுவர், இந்த நீராகாரம் உடலுக்கு நன்மை தருபவை ஆனால் இதனுடன் இரண்டு வெங்காயத்தையும் கடித்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பி-காம்ப்ளக்ஸ் நிறைய கிடைக்கும். இந்த நீராகாரம் பருகிய அரை மணி நேரம் கழித்துதான் தேநீர் பருகவேண்டும். இல்லையேல் இரண்டும் கலந்து புளித்த ஏப்பத்தை உண்டாக்கும்.

 

  1. மீன் குழம்பு எல்லோருக்கும் பிடிக்கும். இதனை வறுத்து சாப்பிடாமல் குழம்பு வைத்து சாப்பிடுவது அதிக புரோட்டினை தரும்.  தயிரை இந்த மீன் சாப்பிட்டப்பின் அரவே தொடக்கூடாது.  இது சருமத்தில் வெண்புள்ளிகளை ஏற்படுத்தும்.

 

  1. கருவாடு சாப்பிடும் போது குழம்பில் உப்பு குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்தால் மிக நலம். ஏனெனில் இந்த கருவாட்டில் அதிக உப்புக்கள் இருக்கும். சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

  1. பீட்ஸா, பர்க்கர், கேக் மற்றும் தேங்காய்ப்பண் அகியவற்றை சாப்பிட்டால் கண்டிப்பாக அரிசி சாதம் சாப்பிடக் கூடாது.  ஏனெனில் அரிசி சாதம் விரைவாக செரிமானம் ஆகிவிடும் ஆனால் மேற்கூறியவை மைதா மாவு சேர்க்கப்பட்டு இருப்பதால் சீக்கிரம் செரிமானம் ஆகாது இரண்டும் சேர்ந்து அஜீரணத்தை பாதிக்கும். வாந்தி அல்லது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

 

  1. பால் என்பது திரவ உணவு அதனால் அது செரிக்க நேரம் ஆகாது என்ற நினைக்க வேண்டாம்.  பால் செரிக்க அரை நாட்கள் தேவைப்படும், அதனால் தான் பாலை உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு வேளை உணவாக கொடுக்கின்றனர். இதனுடன் கலந்து சாப்பிடும் வாழைப்பழம், முழாம்பழம் போன்றவை எதிர்த்து வாயிற்கு மீண்டும் வரும்.  அதனால் பாலுடன் இவற்றை உண்ண வேண்டாம்.

 

  1. தக்காளி மற்றும் மற்ற காய்கறிகள் சேர்த்து உணவு உண்ண வேண்டும்.  இது செரிமானத்தை அதிகப்படுத்தும்.  இந்த செரிமானப் பிரச்சினைகள் தீர்வதற்கு சுடுநீர் அல்லது சீரகத்தை எடுத்து தண்ணீரி்ல் கொதிக்க வைத்து பருகவும்.