பற்கள் வெள்ளையாக இருக்க பல வழிகள் இருக்கிறது. ஒன்று டூத் பிரஸ்-ஆல் அல்லது விரலால் பற்களை துலக்குவது.

மற்றொன்று, இந்த உணவுகளை உண்டாலே பற்களானது சுத்தமாகிவிடும்.

ஸ்ட்ராபெர்ரி:

இயற்கையாகவே ஸ்ட்ராபெர்ரி ஒரு டூத் பேஸ்ட். இதில் சிட்ரஸ் ஆசிட் இருக்கிறது. இதனால் இதை உண்பதால் பற்களானது சுத்தமாவதோடு, வெள்ளையாகவும் ஆகும்.

வேண்டுமென்றால் தினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால், பற்களானது சுத்தமாகும். பற்கள் வெள்ளையாக வேண்டுமென்றால், ஸ்ட்ராபெர்ரியை அரைத்து அத்துடன் பேக்கிங் சோடாவை சேர்த்து, பின் துலக்க வேண்டும்.

ஆப்பிள்:

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆன்ஸிடன்ட் பாக்டீரியாவை அழித்து, வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்குவதோடு, பற்களை வெள்ளையாக்குகிறது. ஆகவே தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.

எலுமிச்சை:

எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால், இது பற்களுக்கு மிகவும் சிறந்த ஒன்று. ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால், பற்களானது சுத்தமாகவும், பாக்டீரியாவை அழித்து, ஈறுகளை வலுவாக்கும்.

வேண்டுமென்றால் எலுமிச்சையுடன் சிறிது உப்பை தொட்டு தினமும், பல் துலக்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் துலக்கி வந்தால், பற்கள் வலுவடைந்து, வெள்ளையாகும்.

சீஸ்:

சீஸ் கூட ஒரு வகையான டூத் பேஸ்ட். எப்போது சீஸை உண்டாலும் வாயில் எச்சிலானது ஊற்றும். சொல்லப்போனால், உண்மையில் சீஸ் ஆனது எச்சிலை அதிகமாக சுரக்கும். அப்படி எச்சில் சுரந்தால் பற்களானது சுத்தமாவதுடன், வாயில் துர்நாற்றத்தை குறைத்து, கிருமிகளையும் அழிக்கும்