சிலருக்கு முகம் முழுவதும் முகத்தில் பருக்கள் குடியேறி இருக்கும்.  ஒருவரது முகத்தில் பருக்கள் வருவதற்கு சருமத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது அல்லது பால் பொருட்களை அதிகம் உட்கொள்வது போன்றவைகள் முக்கிய காரணங்களாகும். 

எனவே உங்கள் முகத்தில் பருக்கள் வராமல் இருக்க வேண்டுமானால், ஒருசில பழக்கங்களைத் தவிர்த்திடுங்கள். அந்த பழக்கங்களைத் தவிர்த்தாலே பருக்கள் வருவதைத் தடுக்கலாம். 

முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பதற்கு காரணமாக இருக்கும் பழக்கங்கள் 

முதல் பழக்கம் 

முகத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், பருக்கள் வரும். எனவே ஒரு நாளைக்கு 2 முறை நல்ல கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம். அதற்காக நல்ல வாசனையாக உள்ளது என்று கெமிக்கல் நிறைந்த கிளின்சர்களைப் பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால், முகத்தில் உள்ள சிறு பருவும் பெரிதாகி பரவ ஆரம்பித்துவிடும்

இரண்டாவது பழக்கம் 

அன்றாடம் பால் பொருட்களை அதிகம் உட்கொள்வதாலும் பருக்கள் வரும். இதற்கு பால் பொருட்களில் உள்ள இன்சுலின் தான் காரணம். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பும் அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, பருக்களை அதிகம் வரவழைக்கும்.

மூன்றாவது பழக்கம் 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன்களும் பருக்கள் வருவதற்கு முக்கிய காரணமாகும். எப்படியெனில், மொபைலை கண்ட இடத்தில் வைப்பதோடு, அழுக்கான கைகளால் மொபைல் போனை உபயோகித்து, அதையே முகத்தின் அருகில் வைத்து பேசும் போது, சருமத்தில் பாக்டீரியாக்களின் அளவு அதிகரித்து, சருமத் துளைகளை பாதித்து பிம்பிளை உண்டாக்கும்.

நான்காவது பழக்கம் 

பலரும் கை, கால்களுக்கு பயன்படுத்தும் க்ரீம்களை முகத்திற்கும் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்தினாலும் பருக்கள் வரும். சொல்லப்போனால், கை, கால்களுக்கு பயன்படுத்தும் லோசன்களில் எண்ணெய் பசை சற்று அதிகமாக இருக்கும். இதை முகத்திற்கு பயன்படுத்தும் போது, சருமத்துளைகளில் அடைப்புக்கள் ஏற்பட்டு பருக்கள் வரும்

ஐந்தாவது பழக்கம் 

சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், அது சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஏனெனில் சர்க்கரை உணவுகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் இருப்பதால், அவை பருக்களை உண்டாக்கும். ஆகவே சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை அளவாக சாப்பிட்டு, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.