Asianet News TamilAsianet News Tamil

பூரான் கடிக்கு இவ்வளவு இயற்கை  மருந்துகள் இருக்கு...நீங்கள் தெரிஞ்சுக்கு நண்பருக்கும் பகிருங்கள்...

There are so many natural medicines for centipede bite ...
There are so many natural medicines for centipede bite ...
Author
First Published Apr 14, 2018, 12:54 PM IST


பூராண் என்று அழைக்கப்படும் நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. 

பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். 

வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.

உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.

பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.

பூரான் கடிக்கு இன்னும் சில மருத்துவ முறைகளும் உண்டு...

** குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.

** வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.

** மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெயில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.

** ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் – கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios