Asianet News TamilAsianet News Tamil

பலாப்பழத்தில் மருத்து குணங்கள் இவ்வளவு இருக்கு; தெரிஞ்சுக்கிட்டு சாப்பிடுங்க...

There are so many medicines in the jackpot Eat it and eat ......
There are so many medicines in the jackpot Eat it and eat ......
Author
First Published Jan 4, 2018, 1:18 PM IST


பலாப்பழத்தில் மற்ற பழங்களை விட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 

அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர் பலாப்பழத்தை சாப்பிட்டால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம். 

பலாப்பழத்தில் எண்ணற்ற வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம் இதர சத்துக்கள் நிறைந்துள்ளன. 

இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையானது அதிகரிக்காமல் இருக்கும். 

மேலும் இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமம், கூந்தல் போன்றவற்றிற்கும் தான் நன்மைகளை வழங்குகிறது. 

எனவே பலாப்பழம் சாப்பிட்டு, உடலை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.

இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், சளி போன்றவை தாக்காமல் தடுக்கலாம்.

பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், சளி போன்றவை தாக்காமல் தடுக்கலாம்

தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios