இளமையைத் தரும்

நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வர என்றும் இளமையுடன் வாழலாம். நெல்லிக்காய் தோலின் சுருக்கங்களை குறைத்து இளமையாக தோன்ற வைக்கும்.

இதில் வைட்டமின் C அதிகம் உள்ளது .கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் மற்றும் வைட்டமின் பிகாம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்கள் உள்ளன.

உடல் சோர்வு

அசதியை நெல்லிக்காய் ஜூஸ் உடனடியாக போக்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும். முடி இழப்பை தடுத்து முடியின் வளர்ச்சியை தூண்டும் மற்றும் வேர்களை வலுப்படுத்தி முடி வளர உதவுகிறது. நெல்லிக்காய் குரோமியம் கொண்டுள்ளது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

நெல்லிக்காய் இன்சுலின் சுரப்பதை தூண்டுகிறது. இதனால் நீரிழிவு நோயாளியின் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. ரத்தத்தில் கொழுப்பின் (cholestrol) அளவை குறைகிறது. நெல்லிக்காய் இதய தசைகளை பலப்படுத்தும்.

ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

நெல்லிக்காய் அண்டிபாக்டீரியா பண்புகளை கொண்டுள்ளதால் நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது உடலின்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

அறுசுவையும் உள்ள கனி நெல்லிக்கனி. தினமும் உணவில் உண்டு வர நாள்பட்ட அனைத்து நோய்களும் கட்டுப்படும்.