மலேரியா

malaria க்கான பட முடிவு

'அனாபிளஸ்' என்ற ஒருவகை பெண் கொசு கடிப்பதால் 'பிளாஸ்மோடியா' என்ற ஒட்டுணி இரத்தத்தில் கலக்கும். இதனால்தான் மலேரியா உருவாகிறது. இது ஒரு தொற்றுநோய். காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, குமட்டல், வியர்த்தல் போன்றவை மலேரியாவின் அறிகுறிகள். 

மலேரியாவால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு அதிகமாகத் தாக்கும். ஆப்பிரிக்காவில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை மலேரியாவால் இறக்கிறதாம். 

மலேரியாவை குணமாக்க:

drink kashayam க்கான பட முடிவு

1.. பத்து வேப்பிலைக் கொழுந்து மற்றும் ஐந்து மிளகுடன் சேர்த்து தினமும் காலை வேளையில் மென்றுச் சாப்பிட்டு வந்தால் மலேரியாவைக் குணமாக்கலாம்.

2.. மிளகை வாணலியில் போட்டு வறுத்து அதை மத்தால் கடைந்து மீண்டும் அடுப்பில் வைக்க வேண்டும். பின்னர், தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைத்து நீர் பாதியாக வற்றியதும் ஆறவைத்து குடிக்க மலேரியா குணமாகும்.

drink kashayam க்கான பட முடிவு

3.. கறிவேப்பிலையின் அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் மிளகு, இஞ்சி சிறிது ஆகியவற்றை தண்ணீரீல் அரைக்க வேண்டும். பின்னர் சுடுதண்ணீர் ஊற்றிக் கலந்து தேன் சேர்த்து காலை, மதியம், மாலை என மூன்று வேளை குடித்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும்.

4.. வல்லாரை, துளசி, மிளகு ஆகியவற்றை கைப்பிடி அளவு எடுத்து மைய அரைத்து சிறு சிறு உருண்டையாக உருட்ட வேண்டும். பின்னர், நிழலில் உலர வைக்க வேண்டும். இந்த உருண்டையை காய்ச்சல் உள்ளவர்கள் வேளைக்கு ஒன்று என்ற கணக்கில் சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும்.

drink kashayam க்கான பட முடிவு

5.. துளசி இலை மற்றும் இஞ்சி இரண்டையும் அரைத்து சாறு எடுக்க வேண்டும். இந்தச் சாற்றை வேளைக்கு கால் டம்ளர் வீதம் குடித்து வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும்.