** கோடையில் வெயிலின் தீவிரம் அதிகரிக்கும்.

** சுற்றுப்புறத்தின் வெப்பநிலை கூடும்பொழுது பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் பல்கி பெருகும். இதனால்தான் சமைத்த உணவும், அரைத்த மாவும் புளிக்க ஆரம்பிக்கின்றன.

** உணவகங்களில் விற்கும் உணவுகள், பொட்டல உணவுகள், பழைய உணவுகள், நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாத தண்ணீர் ஆகியவற்றை கோடையில் உட்கொள்பவர்கள் பலவித வயிற்று உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

** சாலையோரங்களில் விற்கப்படும் மோர், கூழ், குளிர்பானங்கள், பழச்சாறுகள், பழங்கள், திண்பண்டங்கள் போன்ற சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் வயிறு பல பிரச்சனைகளை சந்திக்கிறது.

** கோடையில் சாலையோர உணவுகள், உணவகங்களில் விற்கப்படும் பொட்டல உணவுகளை தவிர்க்க வேண்டும்.

** தேங்காய், பருப்பு, நெய், டால்டா, வெண்ணெய், மாமிச உணவுகள் போன்றவற்றால் தயாரான உணவு உண்ண தாமதம் ஏற்படும்பொழுது புளித்து, உண்பவர்களின் வயிற்றையும் கெடுத்துவிடுகிறது.

** அதுமட்டுமின்றி துரித உணவுகள், ஜங்க் உணவுகள் குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுவதால் அவற்றிலுள்ள வேதிப்பொருட்கள் வெயிலினால் கெட்டுப்போய், செரிமானத்தன்மையை மாற்றி, என்சைம்களின் செயல்பாட்டைக் குறைத்து, கழிச்சலை உண்டுபண்ணுகின்றன.

** கோடையில் சமைத்த உணவை தாமதம் செய்யாமல் உடனே சாப்பிட வேண்டும். பொட்டல உணவுகளை தவிர்க்க வேண்டும்.

** பிரயாணங்களின்போது வெளி உணவுகளை தவிர்த்து, பழங்களை உட்கொள்வது நல்லது.

போன்ற விதிகளை கோடையில் பின்பற்றி நீங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.