Asianet News TamilAsianet News Tamil

ஸ்மார்ட் ஃபோன் விஷன் சின்ட்ரோம் பாதிப்பு வராமல் இருக்க 20:20:20 விதியை ஃபாலோ பண்ணுங்க!

SVS ன் (ஸ்மார்ட் ஃபோன் விஷன் சின்ட்ரோம்) அறிகுறிகள் என்னென்ன? அதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

 Symptoms and Solutions of Smart Phone Vision Syndrome
Author
First Published Mar 30, 2023, 11:35 AM IST

செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் ஸ்மார்ட் ஃபோன் விஷன் சின்ட்ரோம் என்ற பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வருகிறது. SVS ன் (ஸ்மார்ட் ஃபோன் விஷன் சின்ட்ரோம்) அறிகுறிகள் என்னென்ன? அதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இன்று ஓட்ட மொத்த உலகத்தையும் நமது உள்ளங்கையில் காண முடியும் என்ற நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் ஃபோன் தான். ஆகையால் தான் கிராமத்தில் இருப்பவர்களும் சரி, நகரத்தில் இருப்பவர்களும் சரி , வயது பேதமின்றி அனைவரும் பயன்படுத்தக்கூடிய, தவிர்க்க முடியாத ஒரு கருவியாக ஸ்மார்ட் போன் மாறியுள்ளது. ஆனால் இதில் பல்வேறு விதமான நன்மைகள் இருந்தாலும், சில தீமைகளும் இருக்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

எடுத்துக்காட்டாக சமீபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த 30 வயது மிக்க பெண்ணுக்கு திடீரென்று பார்வை தெரியாமல் போயுள்ளது. அதாவது சில நேரங்களில் முழுமையாக பார்வை தெரிவதும் சில நேரங்களில் முழுவதுமாக இருட்டாக தெரிகிறது என்ற பிரச்சனையை சந்தித்துள்ளார் .

கண் மருத்துவரிடம் சென்ற பிறகு, அந்த பெண் கூறிய விஷயங்கள் :

கடந்த ஓராண்டு காலமாக தினமும் பகல் நேரத்தில் 8 மணி நேரங்கள் ஸ்மார்ட் ஃபோன் உபயோகித்துள்ளார். இரவு நேரத்தில் சுமார் 3 மணி நேரம் வரை விளக்குகள் அனைத்த பிறகு உபயோகித்துள்ளார். அதாவது ஒரு நாளைக்கு 11 முதல் 13 மணி நேரம் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்தியுள்ளார்.

ஸ்மார்ட் ஃபோன் விஷன் சின்ட்ரோம்:

கண்களுக்கு சோர்வு அல்லது பலவீனம் ஏற்படுவது , அதாவது நாம் நடை பயிற்சி அல்லது உடற் பயிற்சி செய்த பிறகு  உடல் சோர்வு அல்லது உடம்பு பலவீனம் பெறுவதை போன்று கண்கள் வெகு நேரம் ஸ்மார்ட் ஃபோன் திரையை பார்ப்பதால் கண்களில் சோர்வு ஏற்படுகிறது .

டிஜிட்டல் திரைகள் எப்போதும் வெப்பத்தை உருவாக்கும்,அதனை எவரும் பெரிய அளவில் உணர்ந்ததில்லை, இந்த வெப்பம் கக்கும் கருவியை நாம் தொடர்ச்சியாக பார்ப்பதால் கண்களில் வறட்சி ஏற்பட்டு பார்வை சம்பந்தமான பிரச்சனைகளை உருவாக்குகிறது.

அறிகுறிகள் :

பார்வையில் தெளிவு குறையும் :

பார்வையில் தெளிவற்ற நிலை இருக்கும். இதற்கு முன் பார்த்த பொருட்களையோ அல்லது மனிதர்களையோ பார்க்கும் போது தெளிவாக தெரியாமல் மங்கி காணப்படுவது.

கண் பார்வை இல்லாமல் போகும்:

பின் ஜிக் சாக் கோடுகள் போன்றவை தெரிவது, ஃபிளாஷ் தெரிவது, பின் சட்டென்று கண் பார்வை தெரிவதும், தீடீரென்று கண் பார்வை அற்று அனைத்தும் இருண்டு போய் காணப்படும்.

இதனை தவிர உடல் பருமன், போதிய அளவு தூக்கமின்மை, கழுத்து மற்றும் முதுகு பிரச்சனை ஏற்படும் தவிர மிக முக்கியமாக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.

தீர்வுகள்:

20:20:20 விதி :

20 நிமிடங்கள் தொடர்ந்து ஸ்மார்ட் ஃபோன் திரையை பார்த்தால், 20 அடி தூரத்தில் இருக்கும் பொருளை 20 நொடிகள் தொடர்ந்து பார்க்க வேண்டும்.

நேரத்தை குறைத்தல்:

ஸ்மார்ட் ஃபோன் உபயோகிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும், அதாவது நீண்ட நேரம் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.
 

இடைவெளி அதிகரித்தல்:

நமது கண்ணிற்கும் ஸ்மார்ட் ஃபோன் திரைக்கும் இடைப்பட்ட தூரத்தை அதிகரித்து பார்க்க வேண்டும். முகத்திற்கு அருகில் வைத்து பார்க்காமல் சற்று தொலைவில் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் வைத்து தான் பார்க்க வேண்டும்.
 

இருட்டில் பார்க்க கூடாது:

இருட்டில் பார்ப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். விளக்குகள் அனைத்து பிறகு, நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனை தவிர்த்தால் கண் பார்வை குறைபாடு மற்றும் கண் பார்வை தொடர்பான கோளாறுகள் வருவதை தடுக்கலாம்.

மேற் கூறிய அறிகுறிகள் அல்லது வேறு ஏதேனும் கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் இருப்பின் கண் மருத்துவரை அணுகி ஆலோசனை மற்றும் தீர்வு பெற்றுக் கொள்ளுங்கள்!

தினமும் சைக்கிள் ஓட்டுங்க, சும்மா ஜம்முன்னு வாழுங்க ! அதெப்படினு கேக்குறீங்களா? அப்போ இதை படிங்க.

Follow Us:
Download App:
  • android
  • ios