Super way to clean the toxins in the body ... just once a month ...


தற்போது ஜங்க் உணவுகளை உட்கொள்வதால், உடலின் மூலை முடுக்குகளில் டாக்ஸின்கள் தேங்கி, உடலின் ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்பாட்டையும் பாதிக்கும். குறிப்பாக செரிமான மண்டலத்தைப் பாதித்து, பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.

எனவே ஒவ்வொருவரும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம். அதற்கு மாதம் ஒருமுறையாவது உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். 

இந்த ஆப்பிள் டயட்டை மாதத்திற்கு ஒருமுறை பின்பற்றினால், உடல் முழுமையாக சுத்தமாகி, உடலியக்கம் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். 

உடலை சுத்தம் செய்ய உதவும் ஆப்பிள் டயட்...

** காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். வேண்டுமெனில், ஆப்பிள் ஜூஸ் உடன் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்கலாம். இது தான் காலை உணவு.

** 2 அல்லது 3 மணிநேரம் கழித்து, 2 ஆப்பிளை தோலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

**மதிய வேளையில் ஒரு டம்ளர் க்ரீன் டீயுடன் சிறிது தேன் கலந்து குடிக்க வேண்டும்.

** 1 அல்லது 2 மணிநேரம் கழித்து, மீண்டும் 2-4 ஆப்பிளை தோலுடன் சாப்பிட வேண்டும்.

**மாலை வேளையில் ஸ்நாக்ஸாக, ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும்.

** இரவு நேரத்தில் 2-3ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு துருவி, 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

**இந்த டயட்டில் நற்பதமான ஆப்பிள் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸைத் தான் பயன்படுத்த வேண்டும். பாக்கெட்டில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸையெல்லாம் பயன்படுத்தக் கூடாது. இதனால் எந்தப் பலனும் கிடைக்காது.