இதயத்தில் கொழுப்பு அடைத்துக் கொள்ளும், மாரடைப்பு வரும், உடல் பருமன் வரும் என்று கூறி நல்லெண்ணெயையும் கடலை எண்ணெயும் சாப்பிட்டுக் கொண்டிருந்த நம்மை சூரியகாந்தி எண்ணெய்க்கு மாற்றி விட்டார்கள்.

 நாமும் சூரியகாந்தி எண்ணெய் நல்லது என்று நம்பித்தான் சாப்பிடுகின்றோம்.  இப்போது எல்லோருடைய சமையலறைகளிலும் ஒரு பாக்கெட்டாவது சூரியகாந்தி எண்ணெய் உள்ளது.

பட்டித்தொட்டி எங்கும் பரவியிருக்கும் இந்த சூரியகாந்தி எண்ணெய் உடலுக்கு நல்லதா கெட்டதா என்று தெரியாமலே அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.  ஆனால் அதன் உண்மைகள் கார்ப்பரேட் கம்பெனிகளும் ஆயில் மில்களும் மறைத்துவிட்டன.

Sun Flower Oil உடலுக்கு நல்லது தான்.  அந்த விதையில் கொழுப்பு குறைவு.  இதை சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை. இதயத்திற்கு அடைப்பும் வராது.  ஆனால் இந்த ஒரு கூற்றைப் பயன்படுத்திக் கொண்டு சூரிய காந்தி எண்ணெய் தயாரிக்கும் போது கலப்படம் செய்து விடுகின்றனர்.  குருடாயில் மற்றும் பாமாயிலை கலந்து விடுகின்றனர்.

சூரிய காந்தி எண்ணை வாசமற்றது.  அது சற்றே கெட்டியாக இருக்கும். தேங்காய் எண்ணைக்கும் நல்லெண்ணெய்க்கும் நடுப்பதத்தில் அதன் பாகுநிலை இருக்கும்.

 விரைவாக கொதிநிலை அடையும். ஒரு முறை பயன்படுத்தினாலே அடுத்த முறை பயன்படுத்த முடியாது.

இந்த காரணத்தால் அதில் கலப்படம் செய்து விடுகின்றனர்.  மேலும் சூரிய காந்தி செடி வளர நல்ல வண்டல் மண் தேவை.  அப்படி பயிர் செய்யும் நாடுகள் விரல் விட்டு எண்ணியும் விடலாம்.  

இந்தியாவில் விளையும் சூரியகாந்தி இந்தியாவின் தேவைக்கே பற்றாது.

இப்படி இருக்கையில் உலகத்தில் உள்ள 190 நாடுகளும் எப்படித்தான் சூரிய காந்தியை பயன்படுத்துகின்றார்கள்.  

தேன் கதைதான் 100 கிராம் தேனைக் கொண்டு கலப்படம் செய்து 500 கிராம் தேனாக மாற்றி விடுகின்றார்கள. அதேப் போலத்தான்.

இதனால் நம் பணம் போனது தான் மிச்சம்.  நம்பி வாங்குகின்றோம் ஆனால் கிடைப்பதோ கலப்படச் சரக்கு.  அதே சமயம் உடலும் பாதிக்கின்றது.

இதற்கு ஒரே வழி கையில் ஒரு 5 லிட்டர் கேனை பிடித்துக்கொண்டு செக்குக்கு போங்கள் சுட சுட எண்ணெய் பிழிந்துக் கொண்டு இருப்பார்கள்.

கடலை எண்ணெயை கேனில் வாங்கிக் கொண்டு வந்து சமைத்து சாப்பிடுங்கள் அந்த ருசியை மறக்கவே மாட்டீர்கள்…