Asianet News TamilAsianet News Tamil

சம்மர் வந்தாச்சு; இந்த டிப்ஸ்-ஐ பின்பற்றி கூலா இருங்க…

Summer has arrived Follow these tips to line Kulai
summer has-arrived-follow-these-tips-to-line-kulai
Author
First Published Mar 24, 2017, 1:32 PM IST


1.. வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடித்தால் உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும்.

2.. கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும்.

3.. சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

4.. ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.

5.. குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

6.. வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.

7.. வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.

8.. கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.

9.. முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

10.. வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios