sugar patients avoid these foods

சர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

நாம் உண்ணும் உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்து நிறைந்ததாகும். அரிசி, கோதுமை ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகம் இருந்தாலும் கோதுமை மற்றும் தவிடு நீக்காத அரிசியில் அதிக அளவு உள்ள நார்சத்து (fibre content) சக்கரையின் அளவு ரத்தத்தில் ஒரே சீராக சேரச் செய்கிகிறது. இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் குறைகிறது.

சாப்பிட வேண்டியவை

 காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள்கள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. 

பாகற்காயில் இன்சுலின்போன்ற ஒரு பொருள் சுரந்து, மனிதனின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினை குறைத்துக் கொள்ளலாம்.


ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும் சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது. அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும்திறனை அதிகரிக்கின்றது. 

கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், வெண்பூசணி, வெள்ளைமுள்ளங்கி, புடலங்காய், பலாக்காய்,காலிபிளவர்,முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள், பச்சைக் காய்கறிகளையே முழுவதும் உண்டால் ரத்தத்தில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
சாப்பிட வேண்டிய பழங்கள் :

ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரிப் பழம், கொய்யாப் பழம்.
அருந்த வேண்டிய பானங்கள் :

 சர்க்கரையில்லாத காபி, ,பால், சர்க்கரை சேர்க்காத , தக்காளி சூப், சோடா.

சாப்பிடக்கூடாதவை:

வாழைக்காய், சர்க்கரைப் பூசணி, பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, போன்ற பூமிக்கு கீழே விளைவதையும் தவிர்க்கவேண்டும்


சாப்பிடக்கூ டாத பழங்கள் :

பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரிய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள், பெரிய ஆப்பிள், பெரிய மாம்பழம்,பெரிய கொய்யாப்பழம், சப்போட்டா., சீத்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அருந்தக் கூடாத பானங்கள் மற்றும் பொருட்கள் :

 சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி,,கேக் முதலியவையே.