1.. மிளகு, வெல்லம், பசு நெய் ஆகிய `மூன்றையும் சேர்த்து லேகியமாகக் கிளறி நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

2.. ஒரு ஸ்பூன் மிளகை லேசாக வறுத்து ஒன்றிரண்டாய் தட்டி நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட பசியின்மை தீரும்.

3.. சந்தனம், மிளகும், கற்பூரம் இம்மூன்றையும் சம அளவு எடுத்துஅரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு எளிதில் குணமாகும்.

4.. மாதுளம் பழத்தை தோலுடன் இடித்து சாறெடுத்து அதனுடன் சிறிது மிளகுத் தூளையயும் சேர்த்துக் கொடுத்தால் மதுவினால் ஏற்படும் போதை மயக்கம் உடனே தெளியும்.

5.. அருகம்புல்லுடன் மிளகு சேர்த்து கஷாயமிட்டு குடித்து வர எல்லாவகை நஞ்சும் தீரும். ரத்தம் சுத்தமாகும்.

6.. வெற்றிலையில் 4 முதல் 5 மிளகை சேர்த்து சாப்பிட்டு வர சிறுவண்டுகள் பூச்சிக்கடி குணமாகும்.

7.. சேனைக்கிழங்கு சாப்பிட்டால் ஜீரணிக்கும் உறுப்புகளை உந்தும். அதனால் பசி எடுக்கும். சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் போன்றவற்றில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும்.