Some common hair problems and solutions for common ...
1.. நரை முடி வருவதற்கு இரண்டு காரணம். தான் ஒன்று உடலில் பித்தம் அதிகமாகிவிடுவது மற்றும் வயோதிகத்தால் முடிக்கு போகும் போஷாக்கு குறைவது தான்.
2.. தினமும் தலைக்குளித்தலை தவிர்த்து வாரத்தில் இருநாட்களை தேர்வு செய்து தலை குளிக்கலாம். இதனால் செம்பட்டை நிறத்தில் தோன்றுவது தவிர்க்கப்படும்.
3.. பித்தத்தால் ஏற்படும் இளநரையைப் போக்குவதற்கு அதிகமாக கொத்தமல்லியை உணவில் சேர்க்கவேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் மல்லித்தூள்(தனியா) காபி வைத்து குடிக்கவேண்டும்.
4.. கீழாநெல்லியை நல்லெண்ணையுடன் கலந்து காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தடவி வர வெண்முடி குறைந்த கருமை வளரும்.
5.. கறிவேப்பிலை தான் வெள்ளை முடியை அகற்ற சரியான வழி. தினமும் கறிவேப்பிலை துவையல் செய்து சாப்பிடலாம். கறிவேப்பிலை நன்கு அரைத்து வேர்களில் தடவி வந்தால் விரைவில் முடிக்குத் தேவையான போஷாக்கு கிடைத்துவிடும். கருமுடி வளர ஆரம்பிக்கும்.
6.. எல்லோருக்கும் நெல்லிக்காயைத் தெரியும். ஆனால் யாரும் அதன் பலன்களை அறிந்திருக்க மாட்டார்கள். தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிடுவதால் நரை முடி மற்றும் சகல முடிப்பிரச்சினைகள் மட்டுமின்றி உடலில் உள்ள சருமப்பிரச்சினைகள் மற்றும் கால்சியம் சத்துக்குறைவு போன்ற அனைத்துப்பிரச்சினைகளும் சரியாகிவிடும்.
