Snail: மூல நோய்க்கு மருந்தாகும் நத்தை! எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
நத்தையில் அதிகமாக இரும்புச் சத்துக்கள், கலோரி மற்றும் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளது. அவ்வகையில் நத்தைகள் மூல நோயை எவ்வாறு குணப்படுத்த உதவுகிறது என்பதைப் பார்ப்போம்.
கிராமப் புறங்களில் பொதுவாக சிலர் நத்தைக் கறியை சாப்பிடுவார்கள். ஏனெனில், கிராமப் பகுதிகளில் தான் நத்தைகள் அதிகளவில் தென்படும். இதன்படி, விவசாய வயல் நிலங்களில் இருக்கும் நில நத்தைகள் தான் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது. மேலும் நத்தைக் கறி தான் நாம் சாப்பிடும் இறைச்சிகளிலேயே, மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நத்தையில் அதிகமாக இரும்புச் சத்துக்கள், கலோரி மற்றும் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளது. அவ்வகையில் நத்தைகள் மூல நோயை எவ்வாறு குணப்படுத்த உதவுகிறது என்பதைப் பார்ப்போம்.
நத்தையை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?
சிறிய குச்சியைக் கொண்டு நத்தையை குத்தி எடுத்தால், அதன் சதைப்பகுதி வெளியே வரும். வீட்டில் நத்தையை சுத்தப்படுத்தும் போது நீங்கள் அதன் மேல் ஓட்டை எடுத்து செய்யலாம். நத்தையை 3 நாட்கள் உயிரோடு வைத்து, அதன் குடல் பகுதியில் உள்ள நச்சுகளை வெளியேற்றி விட வேண்டும். அதன் பிறகு நத்தையை வெந்நீரில் கொதிக்க வைத்து, 30 நிமிடங்களுக்குப் பின்னர் வடிகட்டினால் நத்தை இறந்து விடும். இப்போது ஓட்டுப் பகுதியிலிருந்து சதைப் பகுதியை குத்தி எடுத்தால், அது சுலபமாக வெளியே வந்து விடும்.
இப்போது சிறிதளவு மஞ்சள் தூளைச் சேர்த்து, ஐந்து முறை நன்றாக கழுவி சுத்தம் செய்து விட்டால் நத்தை சமைப்பதற்கு தயாராகி விடும்.
நத்தை சாப்பிடுவதன் நன்மைகள்
- நத்தை சாப்பிடுவதன் மூலமாக கண்பார்வை சீராகும்.
- சிறுநீரகங்கள் சீராக செயல்பட உதவி செய்கிறது.
- மூலநோய்களைத் தீர்க்கும் அளவிற்கு, நத்தை அதிக குளிர்ச்சித் தன்மையைக் கொண்டுள்ளது.
Stomach Pain: அடிக்கடி வயிற்று வலியா உடனடி நிவாரணம் பெற இதைச் செய்யுங்கள்!
எப்படி எடுத்து கொள்ளலாம்?
நத்தையை உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வேக வைத்து, சற்று அதிகமாக தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். இந்த நீரை வடிகட்டி இழுத்து, சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து சூப் போல் குடித்து வரலாம்.
வாணலியில் இஞ்சிப் பூண்டு விழுது, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகிய மூன்றையும் நன்றாக வதக்கி, நத்தைக் கறியை சேர்த்து கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து, ஒரு வதக்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு சமைக்க வேண்டும். நீர் வற்றிய பின், நத்தை நன்றாக வெந்திருக்கும் போது அதை இறக்கி கொத்தமல்லி மற்றும் புதினா தழைகளைத் தூவிய பிறகு, சாப்பிடலாம்.