தேள் கடிக்கு ஆறு எளிய உடனடி வைத்தியங்கள்…
1.. தேள் கடித்தவர்களுக்கு கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும்.
2.. எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விஷம் இறங்கும்.
3.. நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.
4.. எலுமிச்சை பழத்தின் சாறுடன் உப்பு சேர்த்து கலந்து தேள் கடித்த இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
5.. ஒரு கல்லில் சில துளி நீர் தெளித்து அதில் புளியங்கொட்டை தேய்த்து அதன் சூட்டுடன் தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் அதன் விஷயம் இறங்கியதும் புளியங்கொட்டை கீழே விழுந்துவிடும்.
6.. நாட்டு வெல்லத்துடன், கொஞ்சம் சுண்ணாம்பு மற்றும் சிறிதளவு புகையிலை சேர்த்து நன்றாக கலந்து பிசைத்து தேள் கடித்த இடத்தில் வைத்து கட்டினால் விஷம் குறையும்.