Asianet News TamilAsianet News Tamil

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான் என்பதற்கான அறிகுறிகள்... படிங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க! 

Signs of growing up in the stomach is a baby boy ... you will be surprised to read!
Signs of growing up in the stomach is a baby boy ... you will be surprised to read!
Author
First Published Apr 27, 2018, 1:41 PM IST



ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும்போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள். 

நம் நாட்டில் குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும்.

இந்த அறிகுறிகள் எல்லாம் நம் பாட்டிகளால் கூறப்பட்டவை. மேலும் இந்த அறிகுறிகளைக் கொண்டு கணித்தப்படியே பல பெண்களுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இங்கு 

பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் இதோ...

முதல் அறிகுறி 

கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே, அவர்களின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என அறியலாம். அதில் கர்ப்பிணிகளின் வயிறு கீழே இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

2-வது அறிகுறி 

கர்ப்ப காலத்தில் பெண்களின் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் இருக்கும். அதில் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை. அதுவே ஒருவித மேகமூட்டமான வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் பெண் குழந்தை என்று அர்த்தம்.

3-வது அறிகுறி 

கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் மற்றும் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். அதில் முகத்தில் பருக்கள் அதிகம் வந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

4-வது அறிகுறி 

கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்ப மார்பகங்கள் பெரிதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இடது மார்பகங்கள் தான் பெரிதாகும். ஆனால் ஆண் குழந்தையைச் சுமக்கும் பெண்களுக்கு இடது மார்பகத்தை விட, வலது மார்பகம் பெரிதாகும்.

5-வது அறிகுறி 

கர்ப்ப காலத்தில் பாதங்கள் எப்போதும் மிகவும் குளிர்ச்சியுடன் இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

6-வது அறிகுறி 

கர்ப்ப காலத்தில் பரிசோதனை செய்யும் போது, மருத்துவர்கள் குழந்தையின் இதயத் துடிப்பையும் அளவிடுவார்கள். அப்போது குழந்தையின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்தித்திகு 140 முறை துடித்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

7-வது அறிகுறி 

வயிற்றில் ஆண் குழந்தை வளர்ந்த்ல், கர்ப்ப காலத்தில் தலைமுடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதுவும் சாதாரண நிலையை விட சற்று அதிகமாகவே முடியின் வளர்ச்சி இருக்கும்.

8-வது அறிகுறி 

ஆண் குழந்தை வயிற்றில் வளர்வதாக இருந்தால், கர்ப்பிணிகளுககு புளிப்பான உணவுகள் அல்லது உப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்குமாம்.

9-வது அறிகுறி 

கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமான சோர்வை உணரக்கூடும். இந்நிலையில் தூங்கும் போது, எப்போதும் இடது பக்கமாக தூங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

10-வது அறிகுறி 

ஆண் குழந்தை வயிற்றில் வளர்வதாக இருந்தால், கைகளில் வறட்சிகள் மற்றும் வெடிப்புக்கள் அதிகம் வரும்.

11-வது அறிகுறி 

பொதுவாக கர்ப்ப காலத்தில் காலை வேளையில் பெண்கள் வாந்தி அல்லது குமட்டல் உணர்வால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் இம்மாதிரியான அறிகுறி ஏதும் இல்லாமல் இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

12-வது அறிகுறி 

கர்ப்ப காலத்தில் வயிறு வட்டமாகவும், வயிறு மட்டும் பெரியதாகவும் இருக்கும். இப்படி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

என்ன நான் சொன்னதுபோல ஆச்சரியமா இருக்கா? 

Follow Us:
Download App:
  • android
  • ios