நீங்கள் டீ பைகளை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா? டீ பை பயன்படுத்துவது நம் உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவுக்கும் என்பதை இங்கு காணலாம்.
ஒரு நாளின் தொடக்க முதல் அலுவலக சோர்வு, மதிய வேளை அல்லது ஒரு சிறிய இடைவெளி என எதுவாக இருந்தாலும் ஒரு கப் சூடான டீ குடிப்பது புத்துணர்ச்சியாக இருக்கும். ஆனால் பெரும்பாலானோர் நேரத்தை மிச்சப்படுத்த டீ பைகளை நாடுகிறார்கள். இது குடிப்பதற்கு சுவையாக இருந்தாலும், இதிலிருந்து வரும் பல ஆபத்துக்கள் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. பலருக்கும் டீ பை வசதியாக இருப்பதால் அதையே நாடி செல்கின்றனர். எனவே, மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில், டீ பையில் அதிகமாக டீ குடிப்பதால் அதன் மூலம் வரும் ஆபத்துக்களை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
டீ பை ஏன் ஆபத்து?
பெரும்பாலான டீ பைகள் நைலான் அல்லது பிளாஸ்டிக் போன்றவற்றால் தான் தயாரிக்கப்படுகின்றன. எனவே இதை சூடான நீரில் வைக்கும்போது அதிலிருந்து மைக்ரோபிளாஸ்டிக்ஸை வெளியிடும். பிறகு நாம் குடிக்கும் டீ மூலமாக அது நம் உடலுக்குள் நுழைந்துவிடும். இதை நீண்ட நாள் குடித்தால் உடலில் ஹார்மோன் சமநிலையின்ம, செரிமான பிரச்சனைகள், செல்களில் வீக்கம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது தவிர, பிற கடுமையான நோய்களின் அபாயங்கள் அதிகரிக்கும்.
டீ பை புற்றுநோயை ஏற்படுத்துமா?
சில டீ பைகள் உடலில் புற்றுநோயை உண்டாக்கும் எபிக்ளோரோஹைட்ரின் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகின்றன. இது வெண்மையாகவோ அல்லது பளபளப்பாகவோ காட்டப்படுகின்றன. எனவே டீ பையை சூடான நீரில் மூழ்கும் போது இதன் மூலப்பொருள் டீயில் கலக்கப்படுகிறது. இந்த ரசாயனம் உடலில் நீண்ட நேரம் இருந்தால் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்க கூடும்.
தரம் குறைவான தேயிலைகள்:
டீ பைக்குள் இருக்கும் தேயிலைகள் பொதுவாக தரம் குறைந்ததாக இருக்கும். மேலும் இது தேயிலைகளுக்கு பதிலாக தூசி தரத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. டீ பையில் இருக்கும் தேயிலையானது அதிகமாக பதப்படுத்தப்பட்டு செயற்கை சுவைகள் மற்றும் நறுமணங்களைக் கொண்டிருக்கும். எனவே இந்த டீ குடித்தால் உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.
டீ பையின் பக்க விளைவுகள்:
- அலுவலக மன அழுத்தத்தை போக்க நீங்கள் பல டீ பை டீயை குடித்தால் அது உங்களது உடலில் அதிகப்படியான காஃபினை குவித்து விடும். அதிகப்படியான காஃபின் தூக்கத்தை பாதிக்கும். இதன் விளைவாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
- டீ பையில் இருக்கும் அதிக அளவு டானின்கள் பற்களை கறைப்படுத்தும். மேலும் அஜீரணம், வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
குறிப்பு:
டீ பை டீயானது குடிப்பதற்கு சுவையாக இருந்தாலும், ஊட்டச்சத்துக்கள் பூஜ்ஜியம் தான். எனவே முடிந்தவரை இதில் டீ குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.


