Siddha medical claims some of the ways health

ஆரோக்கியத்திற்கு!

தேக ஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்ணீரும் கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி, யோகாசனம் செய்தால் ஆரொக்கியம் கிடைக்கும்.

ஆண்மை வலுப்பெற!

அரசம் பழத்தை பாலில் போட்டு காச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சிநீங்கும்.

ஓரிலைத் தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தழற்சிநீங்கும்.

செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும்.

பேரீச்சம்பழம், உழுந்து இவைகளை தேனுடன் சேர்த்து அருந்தினால் தழர்வு நீங்கும்.

இலுப்பைப்பூ கஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.

இசை மருத்துவம்!

இன்றைய நவீன விஞ்ஞான முறைப்படி மேல்நாடுகளிலும், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இசையைப் பயன்படுத்துகின்றனர். சில நோய்களுக்கு தகுந்த இசையை தேர்ந்தெடுத்து அதை இசைத்தட்டில் பாடவைத்து நோயாளிமட்டும் கேட்ககூடிய செவிக்கருவியில் பொருத்தி தினம் சில நேரங்கள் அந்த இசையைச் செவிமடுக்க வைப்பாரகள்.

இந்த இசை மருத்துவம் அமோக வெற்றியளிப்பதாக நம்பப்படுகிறது. எமது மூதாதையர் பலநோய்களையும் குணமாக்க திருவாசகம் போன்றசுவையான பாடல்களை பயன்படுத்துனர் என்பது அறிந்ததே.

இப்போதுதான் நமது நவீனவிஞ்ஞானிகள் இந்த உண்மையை கண்டறிந்திருக்கின்றனர. இனியாவது எம்மவர் இதைநம்பி இசையை நோய்கள் தீரப்பயன்படுத்தட்டும்.

இரத்தம் பெருக!

இரத்தம் உடம்பில் விருத்தியாக அதிகம் கீரை உணவுகள் பழவகைகள் தினம் போதிய நீர் அருந்துதல் அவசியம்.. இறைச்சி,ஈரல்,மீன்முதலியவை அதைஉண்பவருக்கு உடன்இரத்தம் விருத்தியாக உதவும். தக்காளனிப்பழமும் இரத்த உற்பத்திக்கு உதவக்கூடியவை. தினம் உடற்பயிற்சியும் இடைவிடாது நடப்பதும் இரத்தவிருத்திக்கு உதவும். பாதாம் பருப்பு பாலுடன் உண்பதால் இரத்தவிருத்தி உண்டாகும். அத்திப்பழத்துடன் பாலும்சேரத்து அருந்துவதும் இரத்த விருத்திக்கு உதவும்.

இளநீர் மருத்துவம்!

இளநீரில் தாதுப் பொருள்களாகிய இரும்பு, பொற்ராசியம், சுண்ணாம்புச்சத்து, சோடியம் ஆகியவை அதிகம் இருப்பதால் சிறுநீரக நோய்களை தடுக்கவும் குணமாக்கவும் பெரிதும் உதவும். குடலில் புளு பெருகுவதையும் குறைக்க வல்லது.