இரவு பகல் என மாறி மாறி வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இதய பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் ஆகியவை அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அமெரிக்காவின் ஹார்வார்ட் மெடிக்கல் பள்ளியின், மருந்தியல் துறை பேராசிரியர், ஈவா ஸ்கெர்ன்ஹாமர் என்பவர் நடத்திய ஆய்வில் கீழ்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நல்ல தூக்கம் அவசியம். ஆனால் ஷிப்ட் மாற்றி வேலை பார்க்கும்போது தூக்கம் கெட்டுவிடும். கடந்த 22 வருடங்களாக 75 ஆயிரம் நர்சுகளின் வாழ்க்கை முறை இதற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில், பிறரை காட்டிலும், ஷிப்ட் மாற்றி வேலை பார்க்கும் பெண்களின் இறப்பு விகிதம் 11 சதவீதம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.
ஐந்து ஆண்டுக்கு இதயம், 15 வருடத்திற்கு நுரையீரல் ஐந்து ஆண்டுகளாக அவ்வப்போது, இரவு மற்றும் பகல் ஷிப்ட் என மாற்றிக் கொண்டே இருக்கும் பெண்களுக்கு, இதயத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு 19 முதல் 23 சதவீதம் அதிக வாய்ப்பு இருப்பதாகவும், 15 ஆண்டுகளாக இவ்வாறு மாற்றிக் கொண்டிருந்தால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 25 சதவீதம் வரை அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வின் மூலம், தூக்கத்திற்கும், மனித உடலுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஷிஃப்ட் மாறி மாறி வேலை செஞ்சா உலகத்தை விட்டு ஷிஃப்ட் தான்…
Latest Videos
