1. ஊமத்தை இலைச்சாறு (300 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மயில் துத்தம் (2 கிராம்) இலைச்சாற்றில் மயில் துத்தத்தைக் கரைத்து எண்ணெய் சேர்த்து அடுப்பிலேற்றி சாறு வற்றும் வரைக் காய்ச்சி வடிகட்டி, ஆறியவுடன் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர எப்படிப்பட்ட நாட்பட்ட புண்ணானாலும் விரைவில் குணமாகும். அறுவை சிகிச்சை செய்தப் புண்களுக்குக் கூட இது மிகவும் சிறந்த பலன் தருகிறது. இத்தைலம் அடர் பச்சை நிறத்தில் இருக்கும்.
2. எருக்கிலைச் சாறு (100 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), மஞ்சள்பொடி (3 கிராம்). இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து சாறு வற்றும் வரை அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, வடிகட்டி ஆறியவுடன் கரப்பான் புண், அடிபட்ட புண், சிரங்கு, பொடுகுப் புண் ஆகியவைகளுக்கு வெளியே தடவி வர மிகச் சிறந்த பலனைத் தரும்; விரைவில் குணமாகும்.
