Asianet News TamilAsianet News Tamil

புடலங்காயின் மருத்துவ குணங்கள்…

putalankas medicinal-qualities
Author
First Published Dec 9, 2016, 12:38 PM IST


கல்யாண விருந்து என்றாலே புடலங்காய் கூட்டு இல்லாத பந்தி விருந்தை பார்க்க முடியாது. புடலங்காயில் பல வகைகள் உள்ளது.  குட்டைப் புடலங்காய், வெள்ளைப் புடலங்காய், ஹைப்ரிட் புடலங்காய் என பல வகையில் மார்க்கெட்டில் விற்கின்றனர். புடலங்காயை கூட்டாகவோ, போரியலகவோ சமைத்து சாப்பிடுவோம்.

புடலங்காயில் இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பி(Antibiotic) அதிகமாக உள்ளது. இது நமது உடலிலுள்ள நச்சுகளை அழித்து வெளியேற்றுகிறது.  சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வர உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுபடும். இது மிகச்சிறந்த மல மிளக்கியாகவும் செயல்படுகிறது.

பொதுவாக புடலங்காயில் தண்ணீர் சத்து மிகுந்து காணப்படுகிறது. சிறிதளவு சாப்பிட்டலே வயிறு நிறையும். நமது எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் ஒரு மிகச்சிறந்த காய்தான்  புடலங்காய். புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் எந்த விதமான பக்கவிளைவுகளும் வராது.

புடலை இலைச் சாற்றுடன் கொத்தமல்லி  சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை தினமும் மூன்று வேளை குடித்து வர  மஞ்சள் காமாலை கட்டுக்குள் வரும். காய்ச்சலையும் கட்டுப்படுத்த வல்லது.

இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து  48 நாட்களுக்கு சாப்பிட்டு வர இதயம் சம்பந்த பட்ட கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. இதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை உடையவை. பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.

புடலையின் வேர்ப்பகுதியானது மலமிளக்கியாகவும் புடலை இலையானது குடல் தொடர்பான பிரச்னைகளை சரி செய்யவும் பயன்படுகிறது. மிகவும் தீவிரமான மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு புடலங்காயின் விதைகள் உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios