கர்ப்பிணி பெண்களே மலேரியாவிடம் இருந்து எச்சரிக்கையாய் இருங்கள்...

மற்ற பெண்களைக் காட்டிலும் கர்ப்பிணி பெண்கள் தான் மலேரியாவால் அதிகம் பாதிக்கப்புக்கு உள்ளாகின்றனர். மற்ற நேரங்களில் இந்த நோய் ஏற்படும்போது இருக்கும் ஆபத்தை விட கர்ப்ப காலங்களில் ஏற்படும்போது மிகவும் வலிமைப் பெற்று இரு உயிர்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். 

malaria க்கான பட முடிவு

அதிலும் முதல் கர்ப்பத்தின்போது மலேரியா வந்தால் இரத்தச் சோகை, கருச் சிதைவு, குறைப்பிரசவம் அல்லது குழந்தை இறந்து பிறத்தல் போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, மலேரியாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எடை குறைவாக இருக்கும். இதனால் அக்குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமின்றி ஒரு வருடத்திற்குள்ளாகவே குழந்தை இறக்கவும் செய்யும்.

pregnant women malaria க்கான பட முடிவு

இதனால் கர்ப்பிணி பெண்கள் மலேரியா பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம். பரிசோதனையில் மலேரியா உறுதியானால் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று, மலேரியாவுக்காக கொடுக்கப்படும் அனைத்து மாத்திரைகளும் கர்ப்ப காலத்தில் ஏற்றது அல்ல. அதனால், மருத்துவரிடம் ஒருமுறைக்கு இருமுறை நன்கு ஆலோசித்தபிறகே மருந்து உட்கொள்ள வேண்டும்.

pregnant women malaria க்கான பட முடிவு