potato having more benefits

உருளைக் கிழங்கு தோலில் இருக்கும் அபரிமிதமான பொட்டாஷியம் சத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. எனவே உருளைக்கிழங்கை சாப்பிடும் போது அதிலுள்ள பொட்டாஷியம் உயர் ரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்கிறது. இதன்தோலில் உள்ள நார்ச்சத்து, ரத்தத்திலுள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.உருளைக் கிழங்கு தோல், அஜீரணத்திற்கு மிகவும் நல்லது.

 உருளைக் கிழங்கு தோலில் வைட்டமின், 'பி6' அதிகம் உள்ளது. அது மூளையில் சுரக்கக்கூடிய ஹார்மோன்களான, செரோடோனின், டோபோமைன் உற்பத்தியாக உதவும். இந்த ஹார்மோன், நம்முடைய நடத்தை, துாக்கம், பசி உணர்வு, செரிமானம், நினைவாற்றல், உடல் சூடு என்று பலவற்றையும் கட்டுப்படுத்தக் கூடியது. செரோடோனின் சுரப்பு குறைந்தால், மன அழுத்தம் ஏற்படும்.