மனிதனின் உடலுறுப்பு செயலிழந்து போகும் தருவாயில், மாற்று உறுப்பை பொறுத்த வேண்டிய  நிலையில் இருக்கும் போது சரியான சமயத்தில் உடலுறுப்பு கிடைக்குமா என்றால் அரிதினும் அரிது  தான்.

ஆனால் தற்போது இதற்கெல்லாம் மாற்றாக பன்றியின் உறுப்பை மனிதனுக்கு பொருத்தும் ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளனர் ஆய்வாளர்கள்

எந்தெந்த உறுப்பு ?

இதயம், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட சில உறுப்புகளை மனிதனுக்கு பொறுத்த முடியும் என   ஆய்வில் தெரியவந்துள்ளது.

எப்படி சாத்தியம் ?

பன்றியில் “ பெர்வ் “ என்ற வைரஸ்  உள்ளது. இந்த  வைரஸால் மனிதனுக்கு தொற்று நோய்கள்  வரும். எனவே  இந்த பன்றிகளிலிருந்து  இந்த வைரஸை நீக்கிவிட்டு,  சில சோதனைகளின் அடிப்படையில்,  மனிதனுக்கு இந்த உடலுறுப்பை பொருந்த  திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றி பெற்றால் பல பேரின் உயிர்கள் காப்பாற்றப்படும்.ஆனால் பன்றிகள்  இறக்கக்கூடும்