மலச்சிக்கலை தடுக்கும் பப்பாளி;ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பாகற்காய்..!!
பலர் விரும்பாத காய்கறிகளில் பாகற்காய் முதன்மையானதாக உள்ளது. அதனுடைய கசப்பு சுவையால், பலரும் அதை சாப்பிட தயக்கம் காட்டுவார்கள். ஆனால் பாகற்காயில் காணப்படும் ஆரோக்கிய நன்மைகள், வேறு எந்த காய்கறியிலும் இல்லை என்று சொல்லலாம்.
பாகற்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. உங்களுக்கு அவ்வப்போது மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட்டால், பாகற்காயை சாப்பிட்ட மறக்காதீர்கள்.
பலர் விரும்பாத காய்கறிகளில் பாகற்காய் முதன்மையானதாக உள்ளது. அதனுடைய கசப்பு சுவையால், பலரும் அதை சாப்பிட தயக்கம் காட்டுவார்கள். ஆனால் பாகற்காயில் காணப்படும் ஆரோக்கிய நன்மைகள், வேறு எந்த காய்கறியிலும் இல்லை என்று சொல்லலாம்.
அதேபோன்று பப்பாளியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, மேலும் பொட்டாசியம், வைட்டமின் சி, மெக்னீசியம், ஃபோலேட், துத்தநாகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், உணவு நார்ச்சத்து மற்றும் கால்சியம் ஆகியவை உள்ளன. பப்பாளி சாப்பிடுவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
பப்பாளியை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். பாகற்காயில் புரதம் அதிகம் இருப்பதால், அதுவும் சக்கரை வியாதியை கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் பப்பாளி பழச்சாறு தொடர்ந்து அருந்துவது நல்லது. மேலும் பாகற்காய் ரத்த கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதனால் இருதய நலனும் மேம்படுகிறது.
நோன்பு காலத்தில் சக்கரை நோயாளிகள் கவனத்திற்கு..!!
பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பாகற்காய் கல்லீரலை நச்சுப் பொருட்களிலிருந்து விடுவிக்கிறது. இது கல்லீரல் என்சைம்களை அதிகரித்து கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் பெறுகிறது.