ovarian baby is very danger

சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணம் என்ன?
பெண்களின் கருத்தரிப்பு பிரச்னைக்கு, சினைப்பை நீர்க்கட்டிகள் 30 சதவீதம் காரணமாகின்றன. உணவுப் பழக்கவழக்கம், சிறுவயது முதலே தரப்படும் அதிகமான ஊட்டச்சத்து, துரித உணவுகள், வாழ்வியல் மாற்றங்கள்,வேலைப்பளு, மன அழுத்தம், பரம்பரை நோய், மரபணு குறைபாடு இவைகளே சினைப்பை நீர்க்கட்டிகளின் பெற்றோர்.

. இக்கட்டிகள் உருவாகிவிட்டால், ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கும். அதிலும்'டெஸ்டோஸ்டிரான்' மிக அதிகமாக சுரக்கும். இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது முற்றிலும் தடைபடும்.


பெற்றோரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில், அது டைப் 1, டைப் 2 எதுவாக இருந்தாலும், அவர்களின் பெண்ணுக்கு சர்க்கரை நோய்த் தாக்கத்துடன் இத்தகைய நீர்க்கட்டிகளின் தாக்கமும் இருக்கும். பிறப்பிலேயே, அவர்களுக்கு இன்சுலினுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அமையப் பெற்றிருப்பதும் இதற்கு ஒரு காரணம்!