Other uses of maize sugar that protect us from gastrointestinal tract ...

மக்காசோளத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள், நார்ச்சத்துகள், கார்போஹைட்ரேட் கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மக்காசோளத்தில் அதிக அளவில் உள்ள பி1 வைட்டமின் சத்துகள் கார்போ ஹைட்ரேட்டுடன் வினைபுரிந்து பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.
அதில் உள்ள விட்மின் பி5 உடற்கூறுக்குத் தேவையான சக்கியை அளிக்கிறது.

சோளத்தில் உள்ள போலோட் என்னும் சத்து உடலில் புதிய செல்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து நோயை விரட்டுகிறது.

இதில் உள்ள நார்சத்து செரிமானத்தில் முக்கியப்பங்காற்றி மலச்சிக்கலைத் தவிர்க்கிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது.

குடல்புற்று நோயில் இருந்து நம்மை காக்கிறது.

சர்க்கரை நோயாளிகளின் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

சோளத்தில் அதிக அளவில் காணப்படும் போலிக் ஆசிட் கர்ப்பக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி மலட்டுத்தன்மையை போக்குகிறது.

உடலில் ரத்தக் குறைபாடு நிலையான அனீமியா நிலையை மாற்றி உடலின் இரத்த விருத்தியில் சோளம் பெரும்பங்கு வகிக்கிறது.