Asianet News TamilAsianet News Tamil

மறதி நோயை பறந்தோடச் செய்யும் பட்டை…

Oblivion to fly ..
oblivion to-fly
Author
First Published Apr 25, 2017, 2:24 PM IST


ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், போன்ற பொருட்கள் உணவில் வாசனை மற்றும் ருசிக்காக சேர்க்கிறோம். இவற்றில் மருத்துவ பயன்களும் உள்ளது.

பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சரியான அளவில், அதற்கான முறையில் உட்கொள்ளப்படும் பட்டை, மறதிக்கு நோயை பறந்தோடச் செய்துவிடும்.

டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது குறித்த சிறப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

பேராசிரியர் மைக்கேல் ஒவாடியா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான் பட்டையின் பெருமை தெரியவந்தது.

மறதி நோய்க்கான காரணமும் தீர்வும் என்ற தலைப்பில் நடந்த ஆய்வு முடிவில் வெளியாகி உள்ள தகவல்கள்:

“உணவில் ருசி மற்றும் வாசனையை அதிகரிக்கவும், எளிதில் செரிமானமாவதற்கும் சேர்க்கப்படும் தாவரப் பொருளான பட்டை, மறதி நோய்க்கும் மருந்தாகிறது.

பட்டையில் உள்ள பி-ஆமிலாய்ட் பாலிபெப்டைட் ஆலிகோமர்ஸ் என்ற மூலப்பொருள் மூளையில் மறதி நோய்க்கு காரணமான பி-ஆமிலாய்ட் பிப்ரில்ஸ் என்ற பாக்டீரியாவை தாக்கி அழிக்கிறது.

இந்த பாக்டீரியாக்கள், மூளையில் உள்ள நியூரான்களை அதிக அளவிலும் விரைவிலும் அழிக்கும் திறன் கொண்டவை.

இவற்றை கட்டுப்படுத்தி அழிப்பதால் நோய்த் தாக்குதல் பெருமளவு குறையும்.

மறதி நோய் உள்ளவர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்களும்கூட பட்டையை தேவையான அளவு உட்கொள்ளலாம்.

அதே நேரத்தில் நாள் ஒன்றுக்கு 10 கிராம் என்ற அளவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்”.

Follow Us:
Download App:
  • android
  • ios