எலுமிச்சைப் பழத்தைவிட, எலுமிச்சை மர இலைகளில் கொட்டிக்கிடக்கும் அற்புதங்கள்..!!
எலுமிச்சையின் சுவை நமக்குத் தெரியும். இது சமையலுக்கும் மருந்துக்கும் பயன்படுகிறது. ஆனால் எலுமிச்சை இலையின் நன்மைகள் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
சிட்ரஸ் அமிலம் நிறைந்த எலுமிச்சைப் பழம் நமக்கு பல்வேறு வழிகளின் பயன்படுகிறது. நமது உணவில் முக்கிய அங்கமாகவும் அது திகழ்கிறது. உடல் ஆரோக்கியம், உணவின் சுவை, சரும பராமரிப்பு, கிருமிநாசினி என பல்வேறு வகைகளில் எலுமிச்சைப் பழம், அதனுடைய சாறு, தோல், விதைகள் பயன்படுகின்றன. எனினும் எலுமிச்சைப் பழத்துக்கு இணையான பலன்கள் அதனுடைய இலைகளிலும் காணப்படுகின்றன. இது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ஊட்டச்சத்து நிறைந்தது
எலுமிச்சைப் பழத்தின் இலைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அதேபோன்று நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, பி1, சி, ஆன்டிஆக்ஸிடன்ட், சிட்ரிக் அமிலம், ஃபிளவனாய்டு, இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட மனித உடலுக்கு வேண்டிய சத்துக்கள் இலைகளில் அடங்கியுள்ளன. இதன்மூலம் எலுமிச்சைப் பழத்தில் இருந்து மட்டுமில்லாமல், அதனுடைய இலைகள் மூலமாகவும் ஆரோக்கியம் பெறலாம். கடுமையான நோய்களை வரவிடாமல் தடுப்பதற்கும் எலுமிச்சைப் பழ இலைகள் பயன்படுகின்றன.
இலைகளை எப்படி பயன்படுத்தலாம்?
எலுமிச்சை இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதற்காக 8-10 எலுமிச்சை இலைகள் இருந்தாலே போதுமானது. அதை 250 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால், எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு அந்த பானத்தை அருந்துவதில் சிரமம் இருந்தாலோ, மிகவும் புளிப்புச்சுவை இருந்தாலோ தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எலுமிச்சைப் பழச்சாறு போன்று அதில் சக்கரையை கொட்டிவிட வேண்டாம். அப்புறம் எந்த பயனும் உடலுக்கு கிடைக்காது.
எலுமிச்சை இலைச் சாறு குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
தலைவலி வராது
எலுமிச்சம்பழ இலைகளை கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை குடித்தால் தலைவலி குறையும். குறிப்பாக ஒற்றைத் தலைவலி ஒரேநாளில் ஓடிவிடும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மூளைக்கு வேண்டிய ஆக்சிஜனை அனுப்பிவைக்கும். அதன்மூலம் தலைவலி சார்ந்த பிரச்னைகள் படிப்படியாக குறைந்துபோகும்.
நரம்பு பிரச்னை நீங்கும்
பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையம் என்கிற National Center for Biotechnology Information (NCBI) வெளியிட்ட தகவலில், எலுமிச்சை பழ இலைகளுக்கு நறுமணங்கள் கொண்டு நரம்பு பிரச்னையை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் உண்டு என்று தெரிவித்துள்ளது. இதை வைத்து கவலை, பதட்டம் போன்ற மனம் சார்ந்த பிரச்னைகள் குறைக்கின்றன. மேலும் சில நரம்பு தளர்ச்சி பிரச்னைகளுக்கும் இவ்விலை பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் சாப்பிட்ட வேண்டிய பழங்களின் பட்டியல் இதோ..!!
நன்றாக தூக்கம் வரும்
எலுமிச்சை இலை தண்ணீரை உட்கொள்வது தூக்கமின்மையை குறைக்கிறது. பதட்டம் மற்றும் பதற்றம் காரணமாக தூக்கம் குறைகிறது. நடு இரவில் எழுவது, நிம்மதியற்ற தூக்கம் எல்லாம் கட்டுக்குள் வரும். இந்த நீர் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. எலுமிச்சை இலைத் தண்ணீரைக் குடிப்பதால் மனநலம் மேம்படும். மன அழுத்தம் குறையும்.
சிறுநீரக கல் பிரச்சனைக்கு தீர்வு
எலுமிச்சை இலைகளில் சிட்ரிக் அமிலம் உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. உங்களிடம் ஏற்கனவே சிறுநீரக கல் இருந்தால், அதன் அளவு அதிகரிக்காமல் தடுக்கிறது. சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை இலை நீரை தாராளமாக அருந்தலாம்.