Asianet News TamilAsianet News Tamil

வேர் முதல் இலை வரை அனைத்திலும் மருத்துவத் தன்மை கொண்டது நன்னாரி…

Nannari is the medical personality of all the root from the root ...
Nannari is the medical personality of all the root from the root ...
Author
First Published Jul 22, 2017, 1:18 PM IST


நன்னாரி கொடி வகையைச் சேர்ந்தது. எதிரடுக்கில் அமைந்த குறுகி நீண்ட இலைகளையுடைய கம்பி போன்ற கொடியினம். இந்த வேரின் மேற்புரம் கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும் இருக்கும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்க செய்யப்படுகிறது.

முக்கிய வேதியப் பொருள்கள் – இலைகளிலிருந்து ரூட்டின், வேர்களிலிருந்து ஹெக்ஸாட்ரை அக்கோன்டேன், லூபியால், ஆல்பா அமரின், பீட்டா அமரின், இட்டோஸ்டிரால் ஆகியவற்றில் எண்ணெய் எடுக்கப்படுகிறது.

பயன் தரும் பாகங்கள்:

வேர், பட்டை, மற்றும் இலைகள்.

மருத்துவ பயன்கள்

1.. சித்த மருத்துவத்தில் இதன் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.

2.. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.

3.. பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.

4.. வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,

5.. செரியாமை, பித்த குன்மம் தீரும்.

6.. ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ்சூடாக அருந்தி வரவேண்டும்.

7.. வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

8.. நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.

9.. நன்னாரி வேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிருநீரக நோய்கள் அனைத்தும் விலகும்.

10.. நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.

11.. நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

12.. வேர் சூரணம் அரைகிராம் காலை மாலை வெண்ணையில் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios