Asianet News TamilAsianet News Tamil

உலகில் 1000க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு! - WHO எச்சரிக்கை

உலகம் முழுவதும் சுமார் 29 நாடுகளில் 1000க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக WHO- உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
 

monkeypox disease Confirmed cases cross 1,000 all over the world
Author
First Published Jun 9, 2022, 1:21 PM IST

இதுகுறித்துப் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதிலும் 29 நாடுகளில் 1000க்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளதாகவும், நோய் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், பாதிப்பு எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கக்கூடும் என்றும், குறிப்பாக நாடுகளில் வேகமாக பரவி வருவதாக தெரிவித்தார்.


குரங்கு அம்மை நோய் பரவலின் முக்கிய அம்சங்கள்

குரங்கு அம்மை நோய் ஐரோப்பிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் அதிகமாக பரவியுள்ளது. இதுவரை, இறப்புகள் ஏதும் பதிவுசெய்யப்படவில்லை. நோய் கட்டுப்படுத்தும் சூழ்நிலையில் உள்ளது. ஓரிணச்சேர்கையாளர்களிடம் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது சமூக பரவல் நிலைக்கு சென்றுவிட்டது. சில பெண்களுக்கும் இந்நோய் பரவியுள்ளது.

இப்போதைக்கு பெரியம்மைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசியே குரங்கு அம்மை நோய்க்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த குரங்கு அம்மை நோய் காற்றில் பரவுகிறதா என்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள நபரி் கொப்புளங்களைத் தொடுதல், அவர்கள் பயன்படுத்திய துணிகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துதன் மூலம், இந்த வைரஸ் பரவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குரங்கு அம்மை நோய்க்கான சிகிச்சை முறை

பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள், குரங்கு அம்மை காய்ச்சலுக்கு எதிராகவும் அளிக்கப்படுகிறது. பெரியம்மை சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட ஒரு ஆன்டிவைரல் ஏஜென்ட் குரங்கு அம்மை சிகிச்சைக்கு உரிமம் பெற்றுள்ளதாக WHO தெரிவித்துள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios