Asianet News TamilAsianet News Tamil

பாம்பு கடிக்கு சித்த மருத்துவ மருந்துகள்..!

medicine drugs-for-snake-bite
Author
First Published Dec 1, 2016, 2:32 PM IST


உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venum) பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து:

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க 
வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios