அடங்கியுள்ள சத்துக்கள்
இந்தப் பூக்களில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன.
விட்டமின் பி1, 2, 3, 5, 6 மற்றும் பி9 வைட்டமின்கள் காணப்படுகின்றன. மேலும் புரதச்சத்து, பொட்டாசியம் போன்றவையும் காணப்படுகின்றன. சத்தான காலிப்ளவர் வாரம் இருமுறை உட்கொண்டால் உடல் நலம் பெறும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மருத்துவ பயன்கள்
இந்தப் பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. விட்டமின் சி, மாங்கனீஸ் உட்பட பல்வேறு சத்துக்களும் காணப்படுகின்றன.
மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும்.
இதன் மூலம் மன அழுத்தம், இதய நோய்களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிப்ளவரில் விட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிறுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் புற்றுநோயையும் கட்டுப்படுத்துகிறது.
இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது, மூலத்தை கட்டுப்படுத்துகிறது, மலச்சிக்கலைப் போக்கும்.
உடல் இளைத்தவர்களுக்கு இது சத்தானது. தினமும் காலிப்ளவரை சமையலில் சேர்த்துக் கொண்டால் கண்டிப்பாக குண்டாகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:57 AM IST