Asianet News TamilAsianet News Tamil

அதிக கொழுப்புக்கு இவைதான் காரணம்..

medical facts-abt-fat
Author
First Published Dec 7, 2016, 3:37 PM IST


நமது உடல் கொலஸ்ட்ராலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது.

நம் கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது.

கல்லீரலும் மற்ற செல்களும் சேர்ந்து இரத்தத்தின் மொத்த கொலஸ்ட்ரால் அளவில் 75% உற்பத்தி செய்கின்றன.

25% கொலஸ்ட்ரால் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிருந்து கிடைக்கிறது.

அதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்

அதிக மாமிச உணவு உண்பது

அதீத உடற்பருமன் (Obesity)

* உடல் இயக்கக் குறைவான பணிகள்.

உடற்பயிற்சியின்மை

அதிக தூக்கம்

புகைப் பழக்கம்

மன அழுத்தம்

மதுப்பழக்கம்

* சக்கரைநோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்கள்.

கருத்தடை மாத்திரைகள்.

* பெற்றோர்களுக்கு மிகை கொலஸ்ட்ரால் இருக்குமானால் அதற்கு காரணமான ஜீன்களை நீங்களும் பெற்றிருக்கக் கூடும்.

பொதுவாக இரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதற்கான எந்த ஓர் அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. ஆகையால்தான் அது “அமைதியான உயிர்க்கொல்லி” என்று அறியப்படுகிறது.

 

உடல் பருமன் இல்லாதவர்களுக்கு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருக்காது என்று சொல்ல முடியாது. யாருக்கும் வரலாம். இரத்த சோதனை செய்து பார்த்தால் தான் தெரிய வரும்.

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு என்பது, 12 மணி நேரம் ஏதும் உட்கொள்ளாத நிலையில் காலையில் எடுக்கப்பட்ட மாதிரி (sample) இரத்தத்திலிருந்து கணக்கிடப்படுகிறது.

அதிலும் ‘லிபோபுரோட்டீன் ப்ரொஃபைல்’ (lipoprotein profile) எனும் இரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios