Medical benefits of pomegranate

நோய் எதிர்ப்புச் சக்தியை எக்கச்சக்கமாய் கூட்டும் மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்...

பொதுவாக பழங்கள் நமக்குத் தேவையான சத்துகளை அள்ளி வழங்குபவை. உடலுக்கும், சருமத்துக்கும் தீங்கு விளைவிக்காதவை. ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சிறப்பு உள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகிய அனைத்திலும் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கின்றன.

** மாதுளம்பழத்தில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

** உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக வேகமாகவும், அதிக அளவிலும் மாதுளை அழிக்கிறது. அதனால் நோய் நீங்கி, ஆரோக்கியமும் சக்தியும் கிடைக்கிறது.

** மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

** வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். 

** பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

** மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே நிற்கும்.