Medical benefits of ginger

1.. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு, வெந்நீர் குடித்துவர தொப்பை கரைந்து விடும்.

2.. இஞ்சி சாறில் தேன் கலந்து, தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர, நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

3.. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட, பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

4.. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

5.. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட, மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

6.. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

7.. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

8.. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

9.. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட, வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.

10.. பத்து கிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கோப்பை வெந்நீரில் கலந்து, காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட, மார்பு வலி தீரும்.