Mask for dry skin tips for shiny skin
சிலருக்கு சருமம் விரைவில் வறண்டு விடும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பேஸ் மாஸ்க் உதவும்.
பேஸ் மாஸ்க் செய்ய தேவையானவை
ஆலிவ் எண்ணெய், காபி மற்றும் தேன் பேஸ் மாஸ்க் :
காபி விதைகள் முகத்தின் மந்தமான மற்றும் உயிரற்ற தோலை இல்லாமல் செய்து ஒரு சிறந்த வழியை உருவாக்குகிறது.
ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து, உங்கள் முகத்தில் பூசி வர உங்கள் முகத்தின் சோர்வை போக்கி புத்துணர்ச்சியை தரும்.
செய்முறை:
தேன் ஒரு தேக்கரண்டி, காபி விதை ஐந்து tsp மற்றும் ஆலிவ் எண்ணெய் 1tsp சேர்த்து பேஸ்ட்டாக செய்து முகம் மற்றும் கழுத்து வரை பூசி 30 நிமிடங்கள் கழிந்து நீரில் கழுவினால் ஒளிரும் சருமத்தை பெறலாம்.
இவ்வாறு 1 வாரத்தில் இருமுறை செய்து வர நல்ல மாற்றம் கிடைப்பதை நீங்களே உணர்வீர்கள்.
2.. உங்கள் முகத்தில் ஒரு மாம்பழத்தை பேஸ்ட்டாக செய்து முகத்தில் பூசவும். 10 நிமிடம் கழித்து சூடான தண்ணீரால் கழுவ வேண்டும்.
இது உங்கள் சரும வறட்சியை போக்கி மென்மையானதாக மாற்றும்.
3.. நச்சுக்கள் சருமத்தில் சேர்ந்திருக்கும். அவற்றை சுத்தம் செய்ய தலை முதல் பாதம் வரை மர மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கப்பு மஞ்சள், விளாமிச்சை வேர், வெட்டி வேர், பாசிப் பயிறு, ரோஜா இதழ்கள், மரிக்கொழுந்து ஆகியவற்றை அரைத்து தடவி குளித்து வர, சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
4.. தயிர், அம்மான் பச்சரிசி, மஞ்சள், செஞ்சந்தனம் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்களில் இளஞ்சூடான நீரில் கழுவலாம். மரு, பரு, கரும்புள்ளிகள் மறைய தொடங்கும். சித்த மருந்தகங்களில் கிடைக்கும் நீர் கோவை என்ற மாத்திரையை இழைத்து பருக்களின் மேல் பூச பருக்கள் மறையும்.
5.. அஞ்சனமிடுதல் என்றால் கண்களில் மை இடுதல். அதாவது அஞ்சன கல்லை இழைத்து தண்ணீரில் கலந்து கண்களில் மையாக இடுதல். 3 நாளுக்கு ஒருமுறை காலை வேளையில் இடலாம். சூரியன் மறைந்த பிறகும், மாதவிலக்கு சமயத்திலும், எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்த அன்றும் மை இடக் கூடாது.
இப்படி மை இடுவதால் கண்களிலிருந்து அழுக்கு, கருநிற நீர், நச்சுக்கள் வெளியேறும். வாதம், பித்தம், கபம் ஆகியவை சமநிலையில் இருக்கும். கண் பார்வை திறனும் அதிகரிக்கும். சுரப்பிகள் சரியாக செயல்படும்.
