கரி, நீர், வாயு, பிராணவாயு எனப்பட்ட மூலகங்கள் ஒன்றிணைந்த இரசாயனப் பொருள்தான் மாச்சத்து ஆகும். இதனைக் கார்போஹைட்ரேட்டுகள் என்று குறிப்பிடுவதுண்டு.

‘கார்போ’ எனப்படும் கரியும் ‘ஹைட்ரேட்’ எனப்படும் நீரும் சேர்ந்தது என்ற அர்த்தத்தில்தான் கார்போஹைட்ரேட் என்று கூறுகிறார்கள்.

மாச்சதிலிருந்துதான் உடலுக்குத் தேவையான சக்தியை நாம் பெற வேண்டியுள்ளது.

இறைச்சி உணவில் இந்த மாச்சத்து அநேகமாக இல்லையென்று கூறவேண்டும். மிகவும் குறைவான அளவு பிராணிகளின் கல்லீரலில் மட்டுமே உள்ளது.

மற்றும் மீன் முட்டை போன்ற எதிலுமே மாச்சத்து இல்லை. அசைவ உணவுக்காரர்கள் மாச்சத்தைப் பெற வேண்டுமானால் கிழங்கு வகைகள், தானியங்கள் போன்ற மரக்கறி உணவிடம்தான் சரணாகதி அடையவேண்டும்.

மாச்சத்து அடங்கியுள்ள உணவுப் பொருட்கள்...

அரிசி (78%), கேழ்வரகு (16.3%), கோதுமை (71.2%), கம்பு (67.1%), சோளம் (66.2%), கடலை (61.2%), பருப்பு (57%), பட்டாணி (56.6%), மரவள்ளிக் கிழங்கு (38.7%), சர்க்கரை வள்ளிக்கிழங்கு (31%), முந்திரிப்பருப்பு (22.3%), வேர்க்கடலை (20.3%), உருளைக்கிழங்கு (19%).

அரிசி அல்லது கோதுமையைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் தேவையான அளவு மாச்சத்தினைத் தாரளமாகப் பெறலாம்.