சிறுவர்கள் குமிழ்விட்டு விளையாடுவதற்கு தனியாக சோப்பு குமிழ் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால் கிராமங்களில் உள்ள சிறுவர்கள் ஒரு செடியின் பாலை எடுத்து கொட்டாங்குச்சியில் சேகரித்து நுணலின் துணையுடன் குமிழ்விட்டு விளையாடுவார்கள். இன்றும் இதை நாம் காணலாம். அதை தாவரம் தான் பலவேறு நோய்களை போக்கி நலமுடன் வாழ வைக்கும் காட்டாமணக்கு. மாற்றடுக்கில் அமைந்த இதன் இலைகள் கைவடிவத்தி்ல் இருக்கும். இதன் தளிர்கள் கரும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதன் பூக்கள் செந்நிறத்தில் இருக்கும். இது ஒரு குறுஞ்செடியாகும். 

இதன் விதைகள் ஆமணக்கு விதைகள் வடிவத்தில் சிறியதாக இருக்கும். ஆதாளை எலியாமணக்கு என்று சித்த மருத்துவத்தில் அழைப்படும் காட்டாமணக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தானாகவே வளர்கிறது. குறிப்பாக வேலிகளில் இதை வளர்ப்பது நடைமுறையில் உள்ளது. இலை தாய்ப்பாலையும் உமிழ்நீரையும் பெருக்கும் ஆற்றல் கொண்டது. பால் காயங்களில் இருந்து வெளிவரும் இரத்தக்கசிவை நிறுத்தவும், சதை நரம்பு வீக்கத்தைக் குறைக்கவும். துணி சோப்பு தயாரிப்புக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் அமைந்துள்ள ஆல்க்கலாய்டு புற்றுநோய் எதிர்பிற்கும் தோல்நோய்களுக்கம் அருமருந்தாகும். 

கால்நடைகளின் புண்களுக்கு ஈக்களினால் உண்டாகும் தொல்லைகளுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இயற்கை பூச்சிகொல்லியாகவும் உராய்வு காப்பு பொருளாகவும் இதன் எண்ணெய் தற்காலங்களில் பயன்பாட்டில் உள்ளது. கடுமையான பல்வலி ஏற்பட்டால் இதன் இளங்குச்சியால் பல் துலக்கினால் பல் ஆட்டம், ரத்தம் கசிதல், பல்வலி நீங்கும். இதன் இலைகளை வளக்கெண்ணெயில் வதக்கி கட்ட கட்டிகள் கரைந்து வலி நீங்கும். ஆறாத சிறங்குகள் இருந்தால் காட்டாமணக்கு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூசிவர சில நாட்ளில் புண் சிரங்கு ஆறும். 

சில தாய்மார்களுக்கு தாய்பால் போதுமான அளவில் சுரக்காது இவர்கள் ஒரு படி தண்ணீரில் ஒரு பிடி இலையை போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் அந்த தண்ணீரால் மார்பில் ஒத்தடம் கொடுத்து வெந்த இலைகளை மாபில் வைத்து கட்டி வந்தால் இரண்டொரு நாளில் தாய்ப்பால் போதுமான அளவு சுரக்க தொடங்கும். மார்பகத்தை கழுவிவிட்டு பால்கொடுக்கவேண்டும். 

சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கும் வயிற்றில் புண் உள்ளவர்களுக்கும் வாயில் புண் ஏற்படும். இவர்கள் காட்டாமணக்கு பாலை துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்களில் வைக்க ரத்தபெருக்கு நிற்கும். புண்கள் சீழ் பிடிக்காமல் குணமடையும். காட்டாமணக்கு வேரை பிடுங்கி அதன் பட்டையை தனியாக எடுத்து மைய அரைக்கவேண்டும். அதில் சுண்டைக்காய் அளவில் பசும்பாலில் கலந்து குடித்தால் சோகை நீங்கும். வயிற்றுகட்டி பெருவயிறு குட்டம் ஆகியவை நீங்கும்.. 


பொம்மைக்காய் என்று விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும் இதன் விதைகள் குமிழ்விடுவதற்கு பயன்படும் பால் கார்த்தி சுற்றுவதற்கு பயன்படும் இதனுடைய கிளை என்று இதன் பயன்பாட்டை அறிந்திருந்தால் நமக்கு காட்டாமணக்கு என்பதும் மூலிகை தான் என்பது நமக்கு தெரிந்தபிறகாவது இந்த தாவரங்களை பாதுகாக்க வேண்டியதும் இதன் தன்மையை அறிந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வளமுடன் வாழ்வோம்.