Asianet News TamilAsianet News Tamil

பனை வெல்லம் - மருத்துவ குணங்கள்…

jaggery --medical-properties
Author
First Published Nov 30, 2016, 2:39 PM IST


பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

எலிகளை வைத்து நடத்திய பரிசோதனை யில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும்.

சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.

தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

பிற பயன்கள்:

பனை வெல்லம் சமையலில் இந்தியா வில் பரவலாக பயன்படுகிறது. ஒரு சிறு துண்டு வெல்லத்தை சாம்பார், ரசம் இவற்றில் போடுவது வழக்கம். குஜராத்தில் பருப்பு சூப்புகளில் வெல்லம் சேர்ப்பதுண்டு. வெல்லத்தால் கடலை மிட்டாய், எள்ளுருண்டை போன்றவை செய்யப்படுகின்றன.

உலகிலேயே பெரிய “வெல்லச்சந்தைகள்” இரண்டும் இந்தியாவில் தான் உள்ளன. முதன்மையானது, உத்திரப்பிரதேசத்தின் முஜாப்பூர் மாவட்டம் இரண்டாவது ஆந்திரபிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ‘அனகாட்பள்ளி’. அனகாட் பள்ளி வெல்லம் உலகபுகழ் பெற்றது.

ஆயுர்வேதத்தில், இகூ வர்க்கம் என்று கரும்பு, அதன் சாறு, சர்க்கரை, வெல்லம், கல்கண்டு போன்றவற்றை குறிக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios