Ivy guard medical benefits well get
கோவைக்காய் மரத்தில் உள்ள இலை, வேர், பழம் போன்ற அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுவதால் அதனை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.
நீரிழிவு நோய், கோனேரியா, மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு இந்த கோவைக்காய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனுடைய இலை தோலில் ஏற்பட்ட காயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.
செரிமான பிரச்சனைக்கு நிவாரணம்:
கோவைக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது மலச்சிக்கல் மற்றும் செரிமானம் போன்ற பிரச்சனைக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.
நீரிழிவு:
நீரிழிவு நோய்க்கு இது மூலிகை மருந்தாக பயன்படுகிறது. கோவைப்பழத்தில் குளுக்கோஸ்-6-பாஸ்பேட் இருப்பதால் நீரிழிவு நோய்க்கு சரியான பயனளிக்க கூடிய வகையாக இருந்து வருகிறது.
ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் உள்ள மருத்துவர்கள் கோவைக்காயின் இலையில் வரும் சாறு மற்றும் அந்த காயை நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
கோவைக்காயில் உள்ள இரசாயனம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது.
அலர்ஜி பாதுகாப்பு:
இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் பாரம்பரிய மருத்துவத்தில் கோவைப்பழத்தை மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இது சுவாச கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பயன்படுகிறது.
எ.கா: ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் பிரச்சனை
புற்றுநோய் வராமல் தடுக்கிறது:
கோவைக்காயை தினமும் எடுத்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். இதில் அதிகமாக ஆண்டியாக்ஸிடண்ட்கள் இருப்பதால் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது.
