Asianet News TamilAsianet News Tamil

உங்கள் முகம் பளிச்சென்று மின்னுவதற்கு 20 நிமிடங்களே போதும். எப்படி?

Its only 20 minutes to grab your face brightly. How
Its only 20 minutes to grab your face brightly. How?
Author
First Published Apr 2, 2018, 1:00 PM IST


கொளுத்தும் வெயிலால், உடல் அளவுக்கு அதிகமாக வெப்பமடைவதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது. 

இதிலிருந்து விடுபட வேண்டுமானால், சருமத்திற்கு தினமும் போதிய பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.  அதுவும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, சருமமும் பொலிவோடு ஜொலிக்கும். 

இங்கு முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக நீக்கி, பொலிவை அதிகரிக்க உதவும் ஓர் எளிய ஃபேஸ் மாஸ்க் உள்ளது.

தேவையானவை:

தக்காளி – 1/2

ரோஸ் வாட்டர்

சர்க்கரை

செய்முறை

முதலில் ஒரு பஞ்சுருண்டையை எடுத்து ரோஸ் வாட்டரில் நனைத்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியைத் துடைத்து எடுக்க வேண்டும்.

பின்பு பாதி தக்காளியை எடுத்து சர்க்கரையைத் தொட்டு, முகம் மற்றும் கழுத்தை 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சரும பொலிவு தக்க வைக்கப்படும்.

பிறகு 2 டீஸ்பூன் தக்காளி சாற்றுடன், 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

அடுத்து 2 டீஸ்பூன் அரிசி மாவுடன், 2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் மற்றும் 2 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். 

இப்படி தினமும் செய்து வந்தால், முகம் எப்போதுமே புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் பளிச்சென்றும் ஜொலிக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios