ஆரோக்கியமான சரிவிகித உணவு கலந்த உணவுப்பழக்கம், காலை உணவைக் கட்டாயம் சாப்பிடுவது, நேரத்துக்கு உணவை உண்பது போன்றவை நொறுக்குத்தீனிக்கு தேவையைக் குறைக்கும்.

பொதுவாக, ஒரு நாளைக்கு 95 சதவிதம் உணவை உட்கொள்ள வேண்டும்; 5 சதவிகிதம் மட்டுமே நொறுக்குத்தீனிகளை எடுத்துக் கொள்ளாம்.

  • வாயில் எதையாவது அரைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், பொட்டுக்கடலை, பொரி, பாதாம்,முந்திரி போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம்.
  • ஒரு உணவு வேளைக்கும், இன்னோர் உணவு வேளைக்கும் இடையில் பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதன் மூலம் நொறுக்குதீனி சாப்பிடும் உணர்வைக் குறைக்கலாம்.
  • மாலை வேளைகளில் சுண்டல், பயறு வகைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
  • தியேட்டர், பள்ளி வளாகங்கள், டீக்கடைகள் போன்றவற்றில் விற்கப்படும் பாப்கார்ன், கோலா பானங்கள், பிரெஞ்ச் பிரைஸ், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து பொரி உருண்டை, வேர்க்கடலை, பொரி போன்றவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.
  • கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவை நல்லவையே. எனினும், வெல்லம், எண்ணெய், கடலை, எள் போன்றவை ஓன்று சேரும்போது கலோரி அதிகமாகிவிடும். எனவே, இவற்றையும் எப்போதாவது சாப்பிடுவது சிறந்தது.
  • பேரிச்சம்பழம், திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
  • நொறுக்குதீனிக்குப் பதில் ப்ரூட் சாலட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளாம்.